திருவள்ளுவர்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஊக்கமுடைமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:42 am

» ஒற்றாடல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:38 am

» கண்ணோட்டம்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:34 am

» வெருவந்தசெய்யாமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:30 am

» கொடுங்கோன்மை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:24 am

» செங்கோன்மை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:19 am

» பொச்சாவாமை
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:15 am

» சுற்றந்தழால்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:10 am

» தெரிந்துவினையாடல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:06 am

» தெரிந்துதெளிதல்
by திருவள்ளுவர் Tue Nov 22, 2016 7:00 am

» இடனறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:42 pm

» காலமறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:38 pm

» வலியறிதல்
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:34 pm

» தெரிந்துசெயல்வகை
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:30 pm

» சிற்றினஞ்சேராமை
by திருவள்ளுவர் Sun Nov 13, 2016 4:26 pm


திருவள்ளுவர்

View previous topic View next topic Go down

திருவள்ளுவர்
திருவள்ளுவர்
Posts : 1000
Join date : 2015-06-15

Postதிருவள்ளுவர் Mon Jun 15, 2015 1:04 am

திருவள்ளுவர் Introduction.

வள்ளுவருக்கு உயிர் கொடுத்தவர்!

திருவள்ளுவருக்கு அதிகாரப்பூர்வமான உருவம் அளித்தவர் மறைந்த ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. 1964-ஆம் ஆண்டு நமது திருவள்ளுவரின் இறுதி வடிவ ஓவியம் வரையப்பட்டது.

திருவள்ளுவரின் ஓவியத்தினை வரைந்து முடித்துவிட்ட ஓவியர், அந்த ஓவியத்தின் கண்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றியவரின் கண்கள் எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனையில் இருந்தபோது அவருக்கு பளிச்சென நினைவில் வந்தவர் நமது பேரரிஞர் அண்ணா அவர்கள்தான்.

தன்னுடைய கன்னிப்பேச்சிலேயே பலரது கவனத்தையும் கட்டிப்போட்ட அறிஞர் அண்ணாவின் கண்கள்தான் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்த ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு அறிஞர் அண்ணாவின் கண்களையே பொருத்தினார்.

முதல்முறையாக 1964-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தமிழக சட்டசபைக்குள் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணை ஜனாதி பதி ஜாகீர் உசேன் திறந்துவைத்தார். சட்டசபையில் வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது.

அவருக்கு ‘ஓவியப் பெருந்தகை’ என்ற பட்டத்தை பேரறிஞர் அண்ணா அளித்து கவுரவித்தார். இன்று நாம் பார்த்து ரசிக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தில் இருக்கக் கூடிய கண்கள் பேரரிஞர் அண்ணாவின் கண்கள் ஆகும்.

'ஒவ்வொரு படைப்பின்போதும் நான் புதிதாகப் பிறக்கிறேன். ஒவ்வொரு நொடியும் நான் படைப்புச் சிந்தனையிலேயே இருக்கிறேன். இறக்கும்போதும் நான் ஒரு சிசுவாகத்தான் இறப்பேன்’ - இப்படித் தன் படைப்புகள் குறித்து தீர்க்கமாகச் சொன்னவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. பள்ளிப் பாடப் புத்தகங்களில், அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்... என பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனை ஓலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான். அதுவரை உருவம் இல்லாத திருவள்ளுவருக்கு 1959-ம் ஆண்டு தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர்.

திருவள்ளுவர் Tvr10

அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரமாண்ட விழா நடத்தி 1964-ம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. அந்த ஓவியம் மட்டும் அல்ல, நின்ற நிலையில் திருவள்ளுவர், தமிழ்த்தாய், அறிஞர் அண்ணா, என இவர் தீட்டியிருக்கும் சில அரிய ஓவியங்கள் மீது இதுவரை ஒரு புகைப்பட வெளிச்சம்கூட விழுந்தது இல்லை. அந்த ஓவியங்களை, தன் வாழ்நாள் பொக்கிஷங்களாகப் பாதுகாத்துவருகிறார் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா. அவற்றை முதல்முறையாக வெளி உலகுக்குக் காட்டினார். இவர் யுனெஸ்கோ விருது பெற்ற குறும்பட இயக்குநர்.

திருவள்ளுவர் Tvr11

'ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என இந்த நான்கிலும் அப்பா தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டவர். அவர் செய்த வேலைகளில் மிக முக்கியமானது திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது. இதற்காக சுமார் 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். பல நூறு ஓவியங்களை வரைந்து, இறுதியாக இப்போது நாம் எல்லோரும் காணும் திருவள்ளுவரை வரைந்தார். அதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு எட்டுத்திக்கும் கொண்டு சென்றார்கள். 'திருவள்ளுவரை ஈன்றெடுத்த தமிழ்த்தாய்க்கும் உருவம் தர வேண்டும்’ என சாண்டில்யன், தமிழ்வாணன், அறிஞர் அண்ணா மூவரும் அப்பாவிடம் கோரிக்கை வைத்தார்கள்.

'தமிழ்த்தாய் எப்படி இருக்க வேண்டும் என ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா அண்ணா?’ என அறிஞர் அண்ணாவிடம் அப்பா கேட்க, 'அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும். உங்களால் முடியும்’னு ஊக்கப்படுத்தினார் அண்ணா. நீண்ட நாட்கள் குறிப்புகள் கிடைக்கவே இல்லை. மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து’ என்ற வரிகளில்தான் அப்பாவுக்கு சின்ன லீட் கிடைத்தது. 'சீரிளமைத் திறம்வியந்து’ என்றால், தமிழ்த்தாய் இளமைத் தோற்றத்தில் இருக்க வேண்டும் என முடிவுசெய்து, 1959-ம் ஆண்டு வரையத் தொடங்கி 1979-ம் ஆண்டு தமிழ்த்தாய் உருவத்தை வரைந்து முடித்தார்.

'இந்தத் தமிழ்த்தாய் ஓவியத்தை இப்படி வரைய என்ன காரணம்?’ என 19 காரணங்களை அடுக்கி நீண்ட விளக்கமும் எழுதியிருக்கிறார். அப்பா தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கல்வெட்டுபோல தன் டைரியில் எழுதிவைத்திருக்கிறார். அதன் மூலம்தான் இவை எல்லாம் எனக்குத் தெரியவந்தன' என அந்த டைரியை நம்மிடம் காண்பித்தார்.

'அப்பா கடைசியாக வரைந்தது தமிழ்த்தாய் ஓவியம். அதன் பிறகு அவருக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. நல்லவேளை அதற்கு முன்பே, அறிஞர் அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், தியாக பிரம்மம், தங்கமயில் முருகன் என பல அரிய ஓவியங்களை வரைந்துவிட்டார். இவற்றில் திருவள்ளுவர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகிய மூன்று ஓவியங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருக்கின்றன. மீதம் இருக்கும் இந்த ஓவியங்களை வரைந்து முடித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இவற்றை எங்கள் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை.

அப்பா பிறந்த டிசம்பர் மாதத்தில் இந்த ஓவியங்களைக் கண்காட்சியாக வைக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். அதற்கு முன்பாக சில ஓவியங்களை உலகத்தின் கண்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' எனக் கைகூப்புகிறார் ஸ்ரீராம் சர்மா!

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum